தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மரபு வழி மருத்துவ மூலிகை ஆய்வில் தாவரவியல் நிபுணர்கள்

மரபு வழி மருத்துவ மூலிகை ஆய்வில் தாவரவியல் நிபுணர்கள்

மரபு வழி மருத்துவ மூலிகை ஆய்வில் தாவரவியல் நிபுணர்கள்


UPDATED : டிச 18, 2014 12:00 AM

ADDED : டிச 18, 2014 01:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2014 12:00 AM ADDED : டிச 18, 2014 01:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் மரபு வழி மருத்துவ மூலிகை குறித்த ஆய்வில் மூலிகை தாவரவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் மரபு வழி மருத்துவ குணமுள்ள மூலிகைகள் குறித்து ஆய்விற்காக மூலிகை தாவரவியல் நிபுணர்கள் 12 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தாவரவியல் நிபுணர் லோகநாதன் தலைமையில் மூன்று நாள் ஆய்வு பணி நடந்தது.

இதுகுறித்து லோகநாதன் கூறியதாவது: தமிழக மக்களிடம் மரபு வழி தமிழ் மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். இதற்காக மூலிகைகளை கண்டறிய 2002ம் ஆண்டு முதல் கொல்லிமலை, ஏற்காடு, சேர்வராயன் மலை, தாண்டிக்குடி மலை உட்பட 12 மலைகளில் ஆய்வு செய்துள்ளோம்.

மூலிகைகளை சித்தர் நூல்கள் மூலம் கண்டறிந்துள்ளோம். அவற்றை மூலிகையின் புகைப்படம், தாவரவியல் பெயர் மற்றும் மருத்துவ குணத்தை எளிமைப்படுத்தி பதிவு செய்துள்ளோம். சித்தர்கள் 2000க்கும் மேற்பட்ட மூலிகைகளை குறிப்பிட்டுள்ளனர். இதில் 1008 மூலிகைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்துள்ளோம். இவற்றில் 504 மூலிகை குறித்து 1,200 பக்க பூர்வீக மருத்து நூல் களஞ்சியம் வெளியிட்டுள்ளோம்.

எஞ்சியுள்ள மூலிகைகள் குறித்த நூலை 2015 ல் வெளியிட உள்ளோம். தாண்டிக்குடி மலைப்பகுதியில் மலை மருதாணி, மஞ்சிஸ்டி, இச்சி மரம், காட்டுக்கானம், சிவ கரந்தை, ஐவேலங்கொடி, குறுந்தொட்டி, மலைச்சுண்டை, அரிவாள் மனைப் பூண்டு உள்ளிட்ட மூலிகைகள் உள்ளன. எனவே பாதுகாக்க வேண்டிய பகுதியில் தாண்டிக்குடியும் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

குழு உறுப்பினர்கள் கலையமுதன், பாலசுப்ரமணி, சம்பத்குமார், சுவாமியப்பன் உடனிருந்தனர். மரபு வழி மருத்துவம் சார்ந்த மூலிகைகள் குறித்த தகவலை 9442708209 என்ற எண்ணில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us