தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேமரா பொருத்தும் நடவடிக்கையை கல்வித்துறை துரிதப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

கேமரா பொருத்தும் நடவடிக்கையை கல்வித்துறை துரிதப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

கேமரா பொருத்தும் நடவடிக்கையை கல்வித்துறை துரிதப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை


UPDATED : டிச 19, 2014 12:00 AM

ADDED : டிச 19, 2014 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2014 12:00 AM ADDED : டிச 19, 2014 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கையை, கல்வித்துறை துரிதப்படுத்த வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில், பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வகுப்பறை, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், நுழைவாயில் என அனைத்து பகுதிகளும், கேமரா வழியாக கண்காணிக்கப்படுகிறது. இதனால், குறும்பு செய்யும் மாணவர்கள் மட்டுமின்றி, மாணவர்களை தேவையின்றி அடித்து மிரட்டும் ஆசிரியர்களும் கண்காணிக்கப்படுகின்றனர்.

பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோர், பிற நபர்களையும் அடையாளம் காண முடிகிறது. இதேபோல், அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை, சில ஆண்டுகளாக நீடிக்கிறது. மாணவர்கள் இடையே மோதல், தண்டனை என்ற பெயரில் மாணவர்கள் துன்புறுத்தப்படுதல், ஆசிரியர் மீது பாலியல் புகார் என பல்வேறு பிரச்னைகள் அவ்வப்போது எழுவதால், பள்ளிக்கு களங்கம் ஏற்படுகிறது.

துறை ரீதியான நடவடிக்கையால், ஆசிரியர்களும் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலங்களில், ஆசிரியர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. திருப்பூரில் பெண்கள் பள்ளியில் ஒரு ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம், ஆசிரியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறைக்குள் மாணவர் கொலை, ஆசிரியர் கொலை போன்ற கொடூர சம்பங்களும் நடந்துள்ளன. தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கூறி வரும் நிலையில், பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, தற்போது வலுத்து வருகிறது.

ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "குறும்பு செய்யும் சில மாணவர்களை கட்டுப்படுத்த முடிவதில்லை. அவர்களால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டித்தால், ஆசிரியர்கள் தாக்கப்படுவது சமீபகாலமாக நடந்து வருகிறது. பணி நேரத்தில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லை. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டால், குற்றச்செயல் தடுக்கப்படும். பள்ளிகளில் கேமரா பொருத்தும் திட்டத்தை, கல்வித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us