UPDATED : டிச 22, 2014 12:00 AM
ADDED : டிச 22, 2014 11:29 AM
சிறப்பு சொற்பொழிவு
மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி கல்லுாரியில் ஈகோ மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. பேராசிரியை மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் ராமலட்சுமி தலைமை வகித்தார். மூலிகைத் தாவரங்களும் அதன் பயன்பாடும் குறித்து ஏற்றுமதியாளர் ஆரோக்கியமேரி விளக்கினார்.
கிறிஸ்துமஸ் விழா
மதுரை ஜெருசலேம் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா நடந்தது. பாதிரியார் பவுல்ராஜ் சாமிதாஸ் தலைமை வகித்தார். தாசில்தார் சரவணப்பெருமாள், வக்கீல் முகமது ராஜபுதீன் முன்னிலை வகித்தனர்.
சர்வதேச கருத்தரங்கு
மதுரை கே.எல்.என்., தகவல் தொழில் நுட்பக் கல்லுாரியில் டிசைன் மற்றும் பயன்பாடு குறித்த சர்வதேச கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ஞானசேகரன் வரவேற்றார். கல்லுாரித் தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், டீன் வசுமதி பங்கேற்றனர்.
ஐ.ஐ.டி., மின்துறை பேராசிரியர் கிரிதர் பேசுகையில்,எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக கற்றுக் கொள்ளும் போது அதிக சந்தோஷம் அடைவோம். புரிதல், கேட்டுக் கொள்ளும் திறன் மூலம் எளிய முறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும், என்றார்.
விழிப்புணர்வு முகாம்
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் வேடர்புளியங்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் நேரு தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சுந்தரி முன்னிலை வகித்தார். டெங்கு தடுப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
