தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனித்திறனை வளர்க்கும் கல்வி இணை செயல்பாட்டு வகுப்புகள் புறக்கணிப்பா?

தனித்திறனை வளர்க்கும் கல்வி இணை செயல்பாட்டு வகுப்புகள் புறக்கணிப்பா?

தனித்திறனை வளர்க்கும் கல்வி இணை செயல்பாட்டு வகுப்புகள் புறக்கணிப்பா?


UPDATED : டிச 22, 2014 12:00 AM

ADDED : டிச 22, 2014 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2014 12:00 AM ADDED : டிச 22, 2014 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: போதிய விழிப்புணர்வு இல்லாததால், தனித்திறனை வளர்க்கும் கல்வி இணை செயல்பாட்டு வகுப்புகளுக்கு, பள்ளி மாணவர்கள் இடையே ஆர்வம் குறைந்து வருவதாக, கல்வி ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு பாடங்களை மட்டுமே கற்பிக்காமல், இசை, நடனம், ஓவியம் போன்ற திறன்களை வளர்க்கும் நோக்கில், கல்வி இணை செயல்பாடு வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால், அதன் மீதான ஈடுபாட்டை மாணவர்கள் இழக்கின்றனர்.

கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள், இதுபோன்ற கலைகளில் ஏதேனும் ஒன்றில் வல்லவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கான வாய்ப்பு முடக்கப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை, நடுநிலைப் பள்ளிகளில் யோகா, கராத்தே பயிற்சி கற்றுத்தரப்படும் என அரசு அறிவித்தது.

எத்தனை பள்ளிகளில் இப்பயிற்சி தரப்படுகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெரும்பாலான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பு குறித்து கண்டுகொள்வதே கிடையாது.

இதற்கென முழுமையான பாடவேளை ஒதுக்கினாலும், ஆசிரியர் பற்றாக்குறை, குறித்த காலத்துக்குள் பாடங்களை நடத்தி முடிக்காதது போன்ற காரணங்களால், அரசு பள்ளிகளில் கலை தொடர்பான பாடவேளைகள் முடங்கியுள்ளன. இதனால், கலை பாடங்களில் மாணவர்களின் திறன் குறைவாகவே உள்ளது.

இவ்வகுப்புகளை நடத்துவதில், கல்வித்துறை சார்பில் எவ்வித காண்காணிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. மாணவர்களும், தங்களுக்கான திறன்களை கண்டறிய தவறுகின்றனர். இதன் பாதிப்பு, உயர்கல்விக்கான துறையை தேர்ந்தெடுப்பதிலும் தொடர்கிறது. ஆசிரியர் பயிற்சி படிப்பு, இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது. எதிர்காலத்தில், ஆசிரியர்களாக பணி ஏற்க விருக்கும் மாணவர்கள், அனைத்து கலைத்திறன் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளை அறிந்தவராக இருக்க வேண்டும்.

கல்வி ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "கல்வியில் மட்டுமின்றி இதர செயல்பாடுகளிலும், மாணவர்களின் ஈடுபாட்டை பொறுத்தே, அவர்களின் தரம் கணக்கிடப்பட வேண்டும். தற்போது நிலைமை மாறி வருகிறது. தேர்ச்சி ஒன்று மட்டுமே இலக்காக வைக்கப்படுகிறது. மாணவர்கள் பிற கலைகளில் திறன் பெற்றிருந்தாலும், அவை பயனளிப்பதில்லை.

மாணவர்களின் கலை ஆர்வத்தை அதிகரிப்பதே, அவர்களை கல்வியிலும் முழுமையாக தேர்ச்சி பெற வழிவகுக்கும். இவை, பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவது அரசு பள்ளிகளில் மட்டுமே. இதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us