தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போல் வால்ட் விளையாட்டில் அசத்தும் கோவை மாணவர்!

போல் வால்ட் விளையாட்டில் அசத்தும் கோவை மாணவர்!

போல் வால்ட் விளையாட்டில் அசத்தும் கோவை மாணவர்!


UPDATED : டிச 22, 2014 12:00 AM

ADDED : டிச 22, 2014 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2014 12:00 AM ADDED : டிச 22, 2014 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை வடவள்ளியை சேர்ந்த மாணவர் மணிகண்டன், போல் வால்ட் விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார்.

வடவள்ளி சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், மணிகண்டன். இவர் 6ம் வகுப்பில் இருந்து தடகள போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தடகளப்போட்டிகளில் மாவட்ட அளவில் தனிப்பட்ட சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து, போல்வால்ட் மீது கொண்ட ஆர்வத்தால், 8ம் வகுப்பு முதல் போல், பயிற்சியை துவங்கினார்.

ஒன்பதாம் வகுப்பில், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த ஆண்டு புதுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான தடகளப்போட்டியில், மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

சாதனைகள் குறித்து மணிகண்டன் கூறுகையில், "போல் வால்ட் போட்டியில் என்னால் சாதிக்க முடியுமா? என்று நினைத்தபோது, என் பெற்றோர்தான், முதலில் ஊக்கம் அளித்தனர். அதன் விளைவாக, சிறப்பு பயிற்சி பெறத் துவங்கினேன். எதிர்காலத்தில் பல சாதனைகள் படைத்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே என் லட்சியம்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us