தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு தினமும் ரூ.25க்கு மூன்றுவேளை உணவு: விடுதி வார்டன்கள் புலம்பல்

மாணவர்களுக்கு தினமும் ரூ.25க்கு மூன்றுவேளை உணவு: விடுதி வார்டன்கள் புலம்பல்

மாணவர்களுக்கு தினமும் ரூ.25க்கு மூன்றுவேளை உணவு: விடுதி வார்டன்கள் புலம்பல்


UPDATED : டிச 24, 2014 12:00 AM

ADDED : டிச 24, 2014 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2014 12:00 AM ADDED : டிச 24, 2014 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 4,300 மாணவர் விடுதிகள் இயங்குகின்றன. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், ஆதரவற்றோர் குழந்தைகளை அரசு விடுதிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்.

நான்காம் வகுப்பு முதல் கல்லூரி வரையான மாணவ, மாணவியர் தனித்தனி விடுதிகளில் தங்கியுள்ளனர்.

அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை சுண்டல், சுக்குமல்லி காபி, இரவு சிற்றுண்டி என ஒவ்வொரு நேரமும் உணவு வழங்க மெனு உள்ளது. மூன்று நேர உணவுக்கும் மாதம்தோறும் ஒரு மாணவருக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை ரூ.759 தான்.

இதன்படி பார்த்தால், சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மாணவருக்கு ரூ.25ல், மூன்று வேளை உணவு வழங்க வேண்டும். இதனால் உணவின் தரம் கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது உள்ள விலைவாசி உயர்வு, வாழ்க்கை தரத்திற்கு ஏற்ப விடுதிகளில் உணவு கட்டணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us