தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு

சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு

சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு


UPDATED : டிச 25, 2014 12:00 AM

ADDED : டிச 25, 2014 01:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2014 12:00 AM ADDED : டிச 25, 2014 01:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு சுயநிதி பாலிடெக்னிக் நிர்வாக சங்கத்தின் தலைவர், செல்வமணி என்பவர் தாக்கல் செய்த மனு: 

கட்டண நிர்ணய குழு அமைத்து கட்டணம் நிர்ணயிக்கும் வரை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாங்கள், கட்டணம் நிர்ணயிக்க முடியும். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு என கட்டண நிர்ணய குழு, நியமிக்கப்படவில்லை. கடந்த 2003 முதல், மாணவர்களிடம் கல்வி கட்டணமாக, 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறோம். 

ஆதிதிராவிடர் நலத் துறை, கடந்த 2012, செப்டம்பரில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, அரசு ஒதுக்கீட்டுக்கு 6,500 ரூபாய், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 21,700 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இந்த அரசாணை, எங்களுக்கு பொருந்தாது என உத்தரவிட வேண்டும். 

கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்படும் வரை ஒவ்வொரு மாணவருக்கும் 30 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, எங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனு, நீதிபதி ராமசுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. ’கட்டண நிர்ணய குழு ஏன் அமைக்கக் கூடாது?’ என, கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசு தரப்பு பதிலளிக்கும்படி, உத்தரவிட்டிருந்தார். 

தற்போது, இவ்வழக்கில் அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, தாக்கல் செய்த மனு: 

சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள், ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரிகளில், கல்வி கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மனுதாரர் கோரும் 30 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, வழங்க முடியாது. எதிர்காலத்தில் குழு நிர்ணயித்த கட்டணத்தை வழங்குவோம். இவ்வாறு, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us