கவிதை, சிறுகதை, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
கவிதை, சிறுகதை, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
UPDATED : டிச 26, 2014 12:00 AM
ADDED : டிச 26, 2014 11:02 AM
புதுச்சேரி: படைப்பாளர் இயக்கத்தின், 5ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கவிதை, சிறுகதை, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படைப்பாளர் இயக்கம் ஆறுசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி படைப்பாளர் இயக்கத்தின் 5ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடக்கவுள்ளது. தை என்ற தலைப்பில் நடக்கும் கவிதை போட்டியில், மரபு கவிதை 16 அடிகளும், புதுக்கவிதை 60 சொற்களிலும் இருக்க வேண்டும்.
விதை என்ற தலைப்பில், 4 பக்க அளவில் சிறுகதையும், போதை என்ற தலைப்பில் 4 பக்க அளவில் கட்டுரை போட்டியும் நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், தங்களது பெயர், உள்ளிட்ட இதர விபரம், தொலைபேசி எண்ணை தனித்தாளில் எழுதி இணைத்து, வரும் 31ம் தேதிக்குள் ஆறு செல்வன், புதுச்சேரி படைப்பாளர் இயக்கம், எண். 4, காமராஜர் தெரு, வி.பி.சிங் நகர், சண்முகாபுரம், புதுச்சேரி 605 009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 98947-55985 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
