கல்லூரிகளில் ரேகிங் தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
கல்லூரிகளில் ரேகிங் தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
UPDATED : டிச 26, 2014 12:00 AM
ADDED : டிச 26, 2014 12:07 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கல்லூரிகளில் ரேகிங் தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். எஸ்.பி., விக்கிரமன், சப்-கலெக்டர் ஸ்ரீதர், டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி முன்னிலை வகித்தனர்.
இதில் கலெக்டர் சம்பத் கூறியதாவது: விழுப்புரம் மாவட்ட கல்லூரிகளில் கல்வி பயில வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்வதை தடுக்க கல்லூரி நிர்வாகம் கண்காணிப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு ரேகிங் செய்தால் அப்பகுதி டி.எஸ்.பி., தொலைபேசி எண்ணை தொடர்பு கொணடு புகார் தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் டி.எஸ்.பி.,க்கள் சங்கர் 944311-8039, சிலம்பரசன் 94981-53000, மதிவாணன் 94424-08077, ராஜேந்திரன் 94981-07321, சீத்தாராமன் 94432-69697, முரளிதரன் 94441-63763 ஆகியோரது எண்களில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
