கோவை மற்றும் மதுரை அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தேர்வு
கோவை மற்றும் மதுரை அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தேர்வு
UPDATED : டிச 29, 2014 12:00 AM
ADDED : டிச 29, 2014 11:01 AM
கோத்தகிரி: கோத்தகிரியில் நடந்து வரும், மாநில ஜூனியர் கால்பந்து போட்டியில், கோவை மற்றும் மதுரை அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றன.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காந்தி மைதானத்தில், நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், 35வது ராமசாமிப்பிள்ளை கோப்பைக்கான ஜூனியர் கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில், 28 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை நடந்த காலிறுதிப் போட்டியில், கோவை மாவட்ட அணி, சென்னை மாவட்ட அணியை, 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு காலிறுதிப் போட்டியில், மதுரை மாவட்ட அணி, துாத்துக்குடி மாவட்ட அணியை, 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மூன்றாவதாக நடந்த போட்டியில், திருவண்ணாமலை, திண்டுக்கல் அணிகள் மோதின. இந்நிலையில், கடும் மேகமூட்டம் காரணமாக, போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த போட்டி இன்று காலை, 7:30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு மணிநேர காலதாமதத்துக்கு பின், திருவள்ளூர், கிருஷ்ணகிரி அணிகள் காலிறுதியில் மோதின. இதில், 1:0 என்ற கோல் கணக்கில், திருவள்ளூர் அணி வெற்றிபெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது.
