தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு பொது நுாலகத்துறை அலுவலர் சங்கம் முடிவு

கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு பொது நுாலகத்துறை அலுவலர் சங்கம் முடிவு

கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு பொது நுாலகத்துறை அலுவலர் சங்கம் முடிவு


UPDATED : டிச 29, 2014 12:00 AM

ADDED : டிச 29, 2014 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2014 12:00 AM ADDED : டிச 29, 2014 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பத்து அம்ச கோரிக்கை களை நிறைவேற்றாவிட்டால், சட்டசபை நடக்கும்போது, கோட்டை நோக்கி பேரணி நடத்த, தமிழ்நாடு பொது நுாலகத்துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.

சங்க மாநில செயற்குழுக் கூட்டம், சென்னையில் நடந்தது. மாநிலத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அப்பர், பொது நுாலகத்துறை அலுவலர் சங்கத் தலைவர் செல்வம் ஆகியோர் பேசினர். ஆறாவது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, நுாலகர்களுக்கு, 400 ரூபாயும், கிராமப்புற நுாலகர்களுக்கு, 200 ரூபாயும், ஊதியம் உயர்த்தி தர வேண்டும்.

அரசு நிதி, நுாலக நிதி, சில்லரை செலவின நிதியில் இருந்து, நுாலகர்களுக்கு ஊதியம் வழங்காமல், அரசு நிதியில் இருந்து, ஊதியம் தர வேண்டும். காலிப் பணியிடங்களை, கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும்; இந்த 10 அம்ச கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், சட்டசபை நடக்கும்போது, பேரணியாக சென்று கோட்டையை முற்றுகையிடுவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us