வாலிபால் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக அணி வெற்றி
வாலிபால் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக அணி வெற்றி
UPDATED : டிச 29, 2014 12:00 AM
ADDED : டிச 29, 2014 11:27 AM
துரைப்பாக்கம்: தென் மண்டல அளவிலான, பல்கலை மகளிருக்கான வாலிபால் போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
சென்னை பல்கலைக்கழகத்தின், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை சார்பில், தென் மண்டல அளவிலான பல்கலைக்கழக மகளிருக்கான வாலிபால் போட்டி, துரைப்பாக்கத்தில் உள்ள, டி.பி., ஜெயின் கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகிறது.
இரண்டாம் நாள் போட்டி ஒன்றில், பாரதியார் பல்கலை அணி 25-13, 25-4, 25-12 என்ற, செட் கணக்கில், திருவள்ளுவர் பல்கலை அணியை தோற்கடித்தது. பெரியார் பல்கலை அணி 25-8, 25-21, 25-12 என்ற, செட் கணக்கில், பாரதிதாசன் பல்கலை அணியை வீழ்த்தியது.
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக அணி, 25-12, 25-16, 25-8 என்ற செட் கணக்கில், புதுச்சேரி பல்கலை அணியை தோற்கடித்தது.
அண்ணாமலை பல்கலை அணி, 25-18, 25-10, 25-23 என்ற செட் கணக்கில், மதுரை காமராஜர் பல்கலை அணியை தோற்கடித்தது. மனோன்மணியம் பல்கலை அணி 25-10, 25-4, 25-8 என்ற செட் கணக்கில், யோகி வீமண்ணா பல்கலை அணியை வீழ்த்தியது.
இந்துஸ்தான், வேல்ஸ், கிருஷ்ணா பல்கலைக்கழக அணிகள் வென்றன. மேலும், கன்னுார், மங்களூர், காந்திகிராமம், மைசூர் பல்கலைக்கழக அணிகளும் வென்றன.
