சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
UPDATED : டிச 29, 2014 12:00 AM
ADDED : டிச 29, 2014 11:28 AM
அ நிறம் | அளவு
செனாய் நகர்: சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு, வீரர், வீராங்கனைகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சென்னை மாவட்ட பிரிவு சார்பில், முதல்வர் கோப்பை போட்டிகள் நடக்க இருக்கின்றன. டென்னிஸ், வாலிபால், இறகுபந்து, ஹாக்கி, கால்பந்து, கூடைபந்து, மேஜைபந்து, கபடி, தடகளம், நீச்சல் ஆகிய போட்டிகள் நடக்க இருக்கின்றன.
போட்டிகள், நாளை துவங்கி, ஜன., 10ம் தேதி வரை நடைபெறுகின்றன. அதில் பங்கேற்க விரும்பும் இருபாலரும், 94442 17190, 74017 03480 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தகவல்களை அறியலாம்.
