தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு


UPDATED : டிச 30, 2014 12:00 AM

ADDED : டிச 30, 2014 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2014 12:00 AM ADDED : டிச 30, 2014 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியில் இன்று துவங்கவிருந்த விளையாட்டு போட்டிகள், ஜனவரி மாதத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு கலைக் கல்லுாரியில், ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். 2014-15ம் கல்வியாண்டுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று துவங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஜனவரியில், போட்டிகள் துவங்கவுள்ளதாக கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் நடக்கவிருந்த கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகள், ஜன., 5, 6ம் தேதிகளில் நடக்கிறது. கபடி போட்டி 7, 8ம் தேதிகளிலும், கோ-கோ போட்டி 9ம் தேதியும் நடக்கிறது. ஜன., 19ல் சதுரங்கம் மற்றும் கூடைப்பந்து போட்டி, 20ல் பூப்பந்து போட்டி, 21ல் ஹாக்கி போட்டி நடக்கிறது. 27ம் தேதி மென்பந்து போட்டியும், 28ம் தேதி கைப்பந்து போட்டியும் இடம்பெறுகிறது. இறுதியாக, அடுத்தாண்டு பிப்., 2 மற்றும் 5ம் தேதிகளில் தடகள போட்டிகள் இடம்பெறுகிறது.

கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் வீரபாண்டி கூறுகையில், "மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், போட்டிகள் ஜன., 5க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது. பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் தங்களை தயார்படுத்திக்கொள்வதுடன், தக்க சீருடையில் வரவேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us