தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பஸ் ஸ்டிரைக்கால் மாணவர்கள் பெருமளவில் பாதிப்பு

பஸ் ஸ்டிரைக்கால் மாணவர்கள் பெருமளவில் பாதிப்பு

பஸ் ஸ்டிரைக்கால் மாணவர்கள் பெருமளவில் பாதிப்பு


UPDATED : டிச 31, 2014 12:00 AM

ADDED : டிச 31, 2014 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2014 12:00 AM ADDED : டிச 31, 2014 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கால், மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தோஷ் ( ஊட்டி அரசு பாலிடெக்னிக் மாணவன், கோத்தகிரி): கோத்தகிரியில் இருந்த ஊட்டிக்கு பஸ் இல்லாததால், மினி பஸ்சில் 30 ரூபாய் கொடுத்து பயணிக்கிறோம்; அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்கு வர முடிவதில்லை. இதனால், உட்தேர்வை எழுத முடியாமல் போனது; மாலையில், பஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மக்களின் சிரமத்தை அரசும், போக்குவரத்து ஊழியர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்னகேசவன் (ஊட்டி): கிராமப்புறங்களுக்கு பஸ் இயக்கப்படுவதில்லை; இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பாதிக்கின்றனர். அரையாண்டு விடுமுறை என்றாலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன; பஸ் இல்லாததால், அவர்கள் பாதிக்கின்றனர். தொழிற்சங்கங்களை அழைத்து, அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us