கிண்டி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் மாநாடு
கிண்டி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் மாநாடு
UPDATED : டிச 31, 2014 12:00 AM
ADDED : டிச 31, 2014 05:18 PM
அ நிறம் | அளவு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுள் ஒன்றான, கிண்டி பொறியியல் கல்லூரியில், அகில உலக முன்னாள் மாணவர் மாநாடு நடைபெறவுள்ளது.
கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பில், மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த அமைப்பின் சர்வதேச மாநாடு, 2015ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி, கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், உலகின் பல நாடுகளில் தங்கி பணிபுரியும் ஏராளமான முன்னாள் மாணவர்கள் உட்பட, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் முன்னாள் மாணவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இத்தகவலை, கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை தலைவர் கருணாகரன் தெரிவித்தார்.
விரிவான தகவல்களுக்கு www.cegam.in
