தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம்


UPDATED : ஜன 02, 2015 12:00 AM

ADDED : ஜன 02, 2015 01:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2015 12:00 AM ADDED : ஜன 02, 2015 01:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருகம்பாக்கம்: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில், சென்னையில் உள்ள அரசு மற்றும், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விருகம்பாக்கம், காமராஜர் சாலையில், ஜெயகோபால் கரோடியா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவியர், வீட்டில் கிடைக்கும், பழக்கொட்டைகள், காய்கறி விதைகள், சாலையோரம் கிடக்கும் பூவரசு கொட்டைகள், பாதாம் கொட்டைகளை, எடுத்து வருகின்றனர்.

விதைகளை நடுவதற்கு உரமாக, பள்ளி வளாகத்தில் கிடக்கும் மர இலைகளை, மக்க வைத்து, உரமாக்கி, மண்ணுடன் கலந்து, பால், மாவு, எண்ணெய் கவர்களில் நிரப்பி விதைகளை நடுகின்றனர். இவ்வாறு, நடும் மரக்கன்றுகளை, மரம் நடுவதில் ஆர்வம் காட்டும் நபர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இலவசமாக கொடுக்கின்றனர்.

சென்னையில், இவ்வாறு, பல அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்கள் மரக்கன்றுகள், செடிகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பயிற்சியை, சமூக ஆர்வலர், முல்லைவனம் மாணவர்களுக்கு அளித்து வருகிறார். மேலும் விவரங்களுக்கு, 98401 28310 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us