தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜன.,6 ல் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

ஜன.,6 ல் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

ஜன.,6 ல் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்


UPDATED : ஜன 02, 2015 12:00 AM

ADDED : ஜன 02, 2015 01:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2015 12:00 AM ADDED : ஜன 02, 2015 01:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ஜன.,6 ல் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

அன்று காலை 8 மணிக்கு போட்டிகள் துவங்குகிறது. இதில் 100, 200, 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் 6,7, மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். ஒரு போட்டியாளர் 3 போட்டிக்கு மேல் பங்கேற்க இயலாது. இதில் 2014-15 ம் ஆண்டுக்கு உரிய பேட்டரி டெஸ்டில் 8,9,10 மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர் மட்டுமே பங்கேற்க முடியும்.

பேட்டரி டெஸ்ட் எடுக்கப்பட்ட மதிப்பெண் படிவம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படாத பள்ளிகள், போட்டிகளில் பங்கேற்க முடியாது. போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர் மண்டல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர்.

மண்டல அளவிலான போட்டிகளில் தேர்வு பெற்றவர்கள் மாநில அரசால் நடத்தப்படும் பல்வேறு அகாடமிகளில் (விளையாட்டுகளுக்கு) தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும். இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத் பிரிட்டனர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us