கன்பூசியஸ் வகுப்பறை துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
கன்பூசியஸ் வகுப்பறை துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : ஜன 04, 2015 12:00 AM
ADDED : ஜன 04, 2015 11:40 AM
கோவை: பாரதியார் பல்கலை மற்றும் சீனா ரேடியோ இன்டர்நேஷனல் இடையே, கன்பூசியஸ் வகுப்பறை துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பல்கலையில் நடந்தது.
பாரதியார் பல்கலை மாணவர்கள் இடையே சீன மொழி மற்றும் கலாசாரத்தை பயிற்றுவிக்க, சீன தத்துவஞானி கன்பூசியஸ் பெயரில் வகுப்பறை ஒன்று துவங்கப்படவுள்ளது. இதற்கு, சீனாவை சேர்ந்த இரு ஆசிரியர்கள் பல்கலையில் தங்கி, மாணவர்களுக்கு பயிற்றுவிக்க உள்ளனர். இவ்வகுப்பறை துவங்குவதற்கு, பாரதியார் பல்கலை மற்றும், சீனா ரேடியோ இன்டர்நேஷனல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை, சீனா ரேடியோ இன்டர்நேஷனல் (தமிழ்ப் பிரிவு) துணை இயக்குனர் கை ஜூன் ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.பல்கலை பதிவாளர் மனோகரன், ஆங்கிலத் துறை தலைவர் சரவண செல்வன், சீனா ரேடியோ இன்டர்நேஷனல் துணை இயக்குனர்கள் சா சவ், சென் கியாங் உட்பட பலர் பங்கேற்றனர்.
