தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"தன்னம்பிக்கையே மனிதனின் உண்மையான பர்சனாலிட்டி"

"தன்னம்பிக்கையே மனிதனின் உண்மையான பர்சனாலிட்டி"

"தன்னம்பிக்கையே மனிதனின் உண்மையான பர்சனாலிட்டி"


UPDATED : ஜன 04, 2015 12:00 AM

ADDED : ஜன 04, 2015 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 04, 2015 12:00 AM ADDED : ஜன 04, 2015 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தோற்றம் பற்றி கவலைப்படக்கூடாது; தன்னம்பிக்கையே, மனிதனின் உண்மையான பர்சனாலிட்டி என, சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசினார்.

சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசியதாவது: படிக்கும் ஆர்வம் மாணவர்களுக்கு இருந்தால், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். முதலில் யாருக்காக படிக்க வேண்டும் என்பதை, மாணவர்கள் உணர வேண்டும். எனக்காக படிக்கிறேன். என்னை சார்ந்துள்ள குடும்பத்துக்காக படிக்கிறேன். எனது எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்காக படிக்கிறேன் என்ற உறுதியான எண்ணம் மனதில் இருந்தால், படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்; பாடம் கஷ்டமாக தோன்றாது.

விளையாட, டிவி பார்க்க, நண்பர்களுடன் பேசுவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிவிட்டு, படிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டும். வாழ்க்கையில் வெற்றிபெற, அழகு தேவையில்லை. திறமையும், முயற்சியுமே முக்கியம். தோற்றம் பற்றி கவலைப்படக்கூடாது. மனதில் உள்ள தன்னம்பிக்கையே, மனிதனின் உண்மையான பர்சனாலிட்டி; மன உறுதி இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசுகையில், "வாழ்க்கையில், வாய்ப்பை தவற விடக்கூடாது. இளமையின் வேகம், எதையும் சாதிக்க வைக்கும். சாதிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக, பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். ஜெயிப்பதை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். அந்த உத்வேகமே, வெற்றியை தரும். முடியாது என்று நினைத்தால், எதுவுமே நடக்காது; முடியும் என நினைத்தால், எல்லாமே சாத்தியம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us