ஜெயிப்பது நிஜம் நிகழ்ச்சி பேருதவியாக இருந்தது: மாணவர்கள், பெற்றோர்கள்
ஜெயிப்பது நிஜம் நிகழ்ச்சி பேருதவியாக இருந்தது: மாணவர்கள், பெற்றோர்கள்
UPDATED : ஜன 04, 2015 12:00 AM
ADDED : ஜன 04, 2015 11:54 AM
நாமக்கல்: காலைக்கதிர் சார்பில் நடந்த ஜெயிப்பது நிஜம் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஆலோசனைகள், பொதுத்தேர்வு குறித்த பதட்டம் பறந்து போக உதவியாக இருந்ததாக, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் தெரிவித்தனர்.
மாணவி சங்கீதா: காலைக்கதிர் நடத்திய ஜெயிப்பது நிஜம் நிகழ்ச்சி, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மதிப்பெண் எடுப்பதில் குழப்பம் இருந்தது. அந்த குழப்பம், இந்நிகழ்ச்சியின் மூலம் தீர்ந்தது. ஆசிரியர் கூறிய கருத்துக்கள் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் உறுதுணையாக இருந்தது.
மாணவர் நாகித்அகமது: இந்நிகழ்ச்சி நல்லமுறையில் இருந்தது. அதிக மதிப்பெண் எடுப்பதற்கு ஆசிரியர்கள் டிப்ஸ் கொடுத்தனர். அவற்றை பயன்படுத்தி, அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுவேன்.
மாணவர் நரேஷ்காந்த்: ஜெயிப்பது நிஜம் உண்மையில் பயனுள்ளதாக இருந்தது. அறிவியல், கணிதம் பாடத்தில் ஆசிரியர்கள் அளித்த டிப்ஸ் ஈசியாக இருந்தது. ஆசிரியர்கள் சொன்ன கருத்துக்கள் எளிமையாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்கின்றேன்.
சித்ரா, பெற்றோர்: மகளுக்கு தேவையான அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது. இந்த தேர்வில், 100க்கு, 100 மதிப்பெண் எடுப்பதற்கு தேவையான தகவல்களை ஆசிரியர்கள் அளித்தனர். அதை பின்பற்றினால், அதிக மதிப்பெண் பெறலாம்.
மாணவி அனிதா: தேர்வு எழுதுவதற்கு தேவையான உதவிகளை வழங்கி உள்ளனர். ஆசிரியர் அளித்த கருத்துக்களை கொண்டு தேர்வு எழுதினால், நிச்சயம் வெற்றி பெறலாம். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காலைக்கதிர் மற்றும் செல்வம் கல்வி நிறுவனத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவி மாலினி, நாமக்கல்: ஆசிரியர்கள் கூறிய கருத்துக்கள், சென்டம் எடுப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. எப்படி தேர்வு எழுத வேண்டும்; பதட்டத்துடன் தேர்வு எழுதக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். அவர்கள் அளித்த முக்கிய வினாக்களை குறித்துக் கொண்டேன். அதன்மூலம், நிச்சயமாக, 1,100 மதிப்பெண்க்கு மேல் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
மாணவர் மனோஜ்குமார், பரமத்தி: தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது, எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்கள் பல நல்ல கருத்துக்களை தெரிவித்தனர். அதன்மூலம் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுவேன்.
மாணவர் மெய்யரசு, குமாரபாளையம்: காலைக்கதிர் நாளிதழை பார்த்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஜெயிப்பது நிஜம் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து பாட ஆசிரியர்களும் நல்ல கருத்துக்களை தெரிவித்தனர். அதிக மதிப்பெண் எடுக்க வழிமுறை பற்றியும் விளக்கினர்.
பூவாயி, பெற்றோர்: நான் காவக்காரன்பட்டியிலிருந்து வருகிறேன். மகள் ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என் கணவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். கூலி வேலை செய்து எனது மகளை படிக்க வைக்கிறேன். என்னைபோல் அவளும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக படிக்க வைக்கிறேன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிரிர்கள் கூறிய கருத்துக்கள்படி படித்தால், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறலாம்.
