தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை


UPDATED : ஜன 06, 2015 12:00 AM

ADDED : ஜன 06, 2015 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2015 12:00 AM ADDED : ஜன 06, 2015 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, ரூ.4 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவித்து, அவர்களின் திறமை மேம்படுத்தும் வகையில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுகள் என்ற திட்டத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோவையில் நடத்தப்பட்டது.

தடகளம், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கபடி, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, ஹாக்கி என 10 விளையாட்டுகள் இடம் பெற்றன. ஹாக்கியை தவிர மற்ற விளையாட்டுகள் நடத்தி முடிக்கப்பட்டன. முதலிடம் பெறுபவர்களுக்கு 1000, இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு 750, மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு, 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதல் மூன்று இடங்களைப் பெற்ற தலா 204 வீரர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க, 4 லட்சத்து 59 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. நடத்தி முடிக்கப்பட்ட விளையாட்டுகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஹாக்கி, விரைவில் நடத்தப்பட்டு, வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி மேத்யூ கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us