தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜன., 10 முதல் மாநில அளவிலான ‘பிச்’ விளையாட்டு போட்டிகள்

ஜன., 10 முதல் மாநில அளவிலான ‘பிச்’ விளையாட்டு போட்டிகள்

ஜன., 10 முதல் மாநில அளவிலான ‘பிச்’ விளையாட்டு போட்டிகள்


UPDATED : ஜன 08, 2015 12:00 AM

ADDED : ஜன 08, 2015 12:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2015 12:00 AM ADDED : ஜன 08, 2015 12:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் உட்பட 10 மாவட்டங்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ’பீச்’ விளையாட்டு போட்டிகள் ஜன., 10ல் துவங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2014-15 ம், ஆண்டிற்கான கடற்கரை மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான ’பீச்’ வாலிபால், கால்பந்து மற்றும் கபடி போட்டிகள் ராமநாதபுரம் அருகே மண்டபம் அரியமான் கடற்கரையில் ஜன., 10, 11ம் தேதி நடக்கிறது.

இப்போட்டியில், ராமநாதபுரம், நாகபட்டினம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 கடற்கரை மாவட்டங்களில் நடந்து முடிந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்க உள்ளனர்.

இதில் முதலிடம் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ரூ. 3000ம், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2000ம், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000ம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும், என மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜான்பாத் பிரிட்டன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us