தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வருவாய் துறையின் அலட்சியத்தால் பள்ளி நிலம் பறிபோகும் அபாயம்

வருவாய் துறையின் அலட்சியத்தால் பள்ளி நிலம் பறிபோகும் அபாயம்

வருவாய் துறையின் அலட்சியத்தால் பள்ளி நிலம் பறிபோகும் அபாயம்


UPDATED : ஜன 08, 2015 12:00 AM

ADDED : ஜன 08, 2015 12:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2015 12:00 AM ADDED : ஜன 08, 2015 12:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியாரிடம் இருந்து, கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட, 4.52 ஏக்கர் நிலம், வருவாய் துறையின் அலட்சியப் போக்கால், பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளி பயன்பாட்டிற்கு, அந்த நிலம் தொடர்ந்து நீடிக்க, அரசு ஆவன செய்ய வேண்டும் என, பெற்றோர் ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தீர்ப்பாணை: திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் கோட்டம், திருவொற்றியூர் வட்டம், கத்தி வாக்கம் கிராமத்தில் புல.எண்.13/1, 13/2 மற்றும் 13/3ல் 4.52 ஏக்கர் நிலம், கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டட விரிவாக்கத்திற்கு, சைதாப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலரால், நில எடுப்பு செய்யப்பட்டு, தீர்ப்பாணை பெறப்பட்டது.

நில உரிமையாளர்கள் சர்ச்சையால், நஷ்டஈட்டுத் தொகை வழங்க, நில கேட்பு துறையிடம் இருந்து (காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர்) 28.15 லட்சம் ரூபாய்க்கு, காசோலை மூலம் சைதாப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலருக்கு, 1993ம் ஆண்டு அளிக்கப்பட்ட விவரம், பள்ளி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை, நில உரிமையாளருக்கு வருவாய் துறை வழங்காததால், அது காலாவதியாகி விட்டது.

இந்த நிலையில், நில உரிமையாளருக்கு தொகையை வழங்க மீண்டும் செல்லுபடியாக்கம் செய்வதற்கான உத்தரவை அரசிடம் பெறாமல் வருவாய் துறை அலட்சியமாக செயல்படுகிறது. தனியாருக்கு, வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டியதன் காரணமாக, கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவாக்கத்திற்கான, 4.52 ஏக்கர் நிலம், பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கை தேவை: பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளி துவங்கியது முதல் இருபாலரும் படிக்கின்றனர். அதனால், 6 முதல் 10ம் வகுப்பு வரை, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக பிரிக்க, பெற்றோர், பொதுமக்கள் கருத்துருக்கள் அனுப்பி உள்ளனர். தனியாக பிரித்தால், அந்த இடத்தில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, தனியாக கட்டப்படும்.

இந்த பகுதிக்கு, பள்ளி ஒரு கல்வி மையமாக தெரிவு செய்யும்போது, கல்வி விரிவாக்கப் பணிக்கு இந்த இடம் பயன்படுத்தப்படும். மத்திய, மாநில அரசுகள், ஆண்டுதோறும் மாணவர்களின் நலன் கருதி, புதிய திட்டங்களை செயல்படுத்துகின்றன. அதனால், புதிய ஆய்வகம், யோகாசன மையம், விளையாட்டு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த கையகப்படுத்திய, 4.52 ஏக்கர் நிலத்தை, பள்ளி பயன்பாட்டிற்கு தொடர்ந்து நீடிக்க அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us