தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"மாறும் சூழலுக்கேற்ப மாணவர்கள் கற்கும்போதே தயாராக வேண்டும்"

"மாறும் சூழலுக்கேற்ப மாணவர்கள் கற்கும்போதே தயாராக வேண்டும்"

"மாறும் சூழலுக்கேற்ப மாணவர்கள் கற்கும்போதே தயாராக வேண்டும்"


UPDATED : ஜன 09, 2015 12:00 AM

ADDED : ஜன 09, 2015 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2015 12:00 AM ADDED : ஜன 09, 2015 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சரவணம்பட்டி: கோவை நீலாம்பூரில் உள்ள ஸ்ரீசக்தி இன்ஜினியரிங் கல்லுாரியில் மூன்று நாள் கருத்தரங்கு துவங்கியது. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் நடக்கும் கருத்தரங்கில், முன்னணி நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

துவக்க நிகழ்ச்சியில், எல் அன்ட் டி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் புவனா ரேகா பேசுகையில், "மாற்றம் பெறும் சூழலுக்கு ஏற்ப, மாணவர்களும் கற்கும் பருவத்திலேயே தயாராக வேண்டும். ஒவ்வொரு கால கட்டத்திலும் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கும் சூழல் மாற்றம் பெறுகின்றன. இந்த சூழ்நிலையை மாணவர்கள் உணர்ந்து, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போதைய சந்தை, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தேவைக்கும் மேலான பொருட்கள் இருப்பதால், அவற்றை தேர்வு செய்யும் முடிவு, வாடிக்கையளர்களை சார்ந்ததாக உள்ளது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us