தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"ஒவ்வொரு மாதமும் ஒரு நகரத்தில் மெகா வேலை வாய்ப்பு முகாம்"

"ஒவ்வொரு மாதமும் ஒரு நகரத்தில் மெகா வேலை வாய்ப்பு முகாம்"

"ஒவ்வொரு மாதமும் ஒரு நகரத்தில் மெகா வேலை வாய்ப்பு முகாம்"


UPDATED : ஜன 11, 2015 12:00 AM

ADDED : ஜன 11, 2015 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2015 12:00 AM ADDED : ஜன 11, 2015 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஒவ்வொரு மாதமும் ஒரு நகரத்தில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நடந்த வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.

விழாவில் வேலை வாய்ப்புத் துறை இணை இயக்குனர் சேகர் வரவேற்றார். கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது: 160 நிறுவனங்கள் தேவையான பணியாளர்களை தேர்வு செய்து 9 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க உள்ளனர். வேலையில்லாத இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு தீர்வாக அமையும், என்றார்.

அமைச்சர் மோகன் பேசியதாவது: 12 லட்சம் பேர் ஆண்டுக்கு ஆன் லைனில் வேலை வாய்ப்பை பதிவு செய்கின்றனர். 52 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், வேலை வாய்ப்புத் துறையின் மூலம் உதவி தொகை பெறும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு நகரில் இதுபோன்ற முகாம் நடக்கிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us