தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ கிரேடு தகுதிக்காக ஆய்வு நடத்தவரும் "நாக்" குழு

ஏ கிரேடு தகுதிக்காக ஆய்வு நடத்தவரும் "நாக்" குழு

ஏ கிரேடு தகுதிக்காக ஆய்வு நடத்தவரும் "நாக்" குழு


UPDATED : ஜன 11, 2015 12:00 AM

ADDED : ஜன 11, 2015 12:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2015 12:00 AM ADDED : ஜன 11, 2015 12:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரிக்கு, ஏ கிரேடு தகுதிக்காக ஆய்வை நடத்த, வரும் பிப்., 4ம் தேதி, தேசிய தர நிர்யணக்குழு(நாக்), நேரில் வருகிறது.

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி, 1966ம் ஆண்டு துவங்கப்பட்டது. இக்கல்லுாரி பி பிளஸ் கிரேடு நிலையில் உள்ளது. வரும் பிப்., மாதம் நாக் அமைப்பை சேர்ந்த மூன்றுவல்லுனர்கள் கொண்ட குழு, கலை கல்லுாரியில், மூன்று தினங்கள் தொடர் ஆய்வு நடத்துகிறது. 45 நாட்களுக்கு பின், ஆய்வு அறிக்கை வாயிலாக கிரேடு அறிவிக்கப்படும்.

தமிழகத்தில், 66 அரசு கல்லுாரிகள் உள்ள நிலையில், கோவை அரசு கல்லுாரி, கரூர் அரசு கல்லுாரி உள்பட பத்துக்கும் குறைவான அரசு கல்லுாரிகளே ஏ கிரேடு பெற்றுள்ளன. ஏ கிரேடு அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை, நிதியுதவி கிடைக்கும். யு.ஜி.சி., சி.பி.யு., வாயிலாக நிறைய நிதியுதவிகளை பெற முடியும்.

நாக் குழு வருகை குறித்தும், அதற்கான ஆவணங்களை தயார் செய்தல், கல்லுாரி வசதிகளை மேம்படுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம், கல்லுாரியில் நேற்று நடைபெற்றது. வணிகவியல் உதவி பேராசிரியர் டேவிட் சுந்தர்ராஜன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, இயற்பியல் துறை தலைவர் குமார் முன்னிலை வகித்தனர். கரூர் அரசு கலை கல்லுாரி ஆங்கில துறை தலைவர் அலெக்ஸாண்டர் பேசினார்.

இதில் கல்லுாரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர். கடந்த, 2004ம் ஆண்டில், சிக்கண்ணா அரசு கல்லுாரியில் நாக் வல்லுனர் குழு ஆய்வு நடத்தி பி பிளஸ் கிரேடு வழங்கியது; 2009ம் ஆண்டில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதோடு மாணவர் எண்ணிக்கையும், 600 ஆக இருந்ததால் ஆய்வு நடத்தப்படவில்லை.

தற்போது மாணவர் எண்ணிக்கை, 2,800 ஆக இருப்பதோடு, பி.எச்.டி., முடித்த பேராசிரியர்கள் 55 பேர், இக்கல்லுாரியில் பணிசெய்வது ஏ கிரேடு பெறும் வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. பிப்., முதல் வாரத்தில் நாக் வல்லுனர் குழு ஆய்வுக்கு வருவதால், அதற்கு முன்னதாக முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர்களுடன் கல்லுாரி நிர்வாகம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. கல்லுாரியில் வரும் 22ம் தேதி மாலை 4:00 மணிக்கு இக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us