தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரியை மாநில அரசுடன் ஒப்படைக்கும் முடிவைக் கண்டித்து போராட்டம்

கல்லுாரியை மாநில அரசுடன் ஒப்படைக்கும் முடிவைக் கண்டித்து போராட்டம்

கல்லுாரியை மாநில அரசுடன் ஒப்படைக்கும் முடிவைக் கண்டித்து போராட்டம்


UPDATED : ஜன 11, 2015 12:00 AM

ADDED : ஜன 11, 2015 12:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2015 12:00 AM ADDED : ஜன 11, 2015 12:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரி மாணவர்களுக்கு, இந்திய மருத்துவக் கழகத்தின் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருக்கும் நிலையில், கல்லுாரியை மாநில அரசுடன் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மும்பை, கோல்கட்டா, சென்னை, கோவை உட்பட 11 இடங்களில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி உள்ளது. அதில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இந்த நிலையில், இ.எஸ்.ஐ., தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2014 டிச., 4ம் தேதி, டில்லியில் நடந்த கூட்டத்தில், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை சிகிச்சைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இ.எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளை, மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். புதிதாக மாணவ, மாணவியர் சேர்க்கை கூடாது என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து, நேற்று, சென்னை கே.கே.நகரில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி முன், மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பண்டாரு தத்தத்ரேயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மத்திய அமைச்சர், இந்த பிரச்னை குறித்து விரைவில் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காணப்படும் என, மாணவ, மாணவியரிடம் தெரிவித்தார். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us