தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காணாமல் போன குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

காணாமல் போன குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

காணாமல் போன குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகோள்


UPDATED : ஜன 11, 2015 12:00 AM

ADDED : ஜன 11, 2015 12:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2015 12:00 AM ADDED : ஜன 11, 2015 12:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: காணாமல் போன குழந்தைகள் குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிப்பதற்காக, ஆபரேஷன் ஸ்மைல் என்ற திட்டம் நீலகிரி மாவட்டத்தில் துவங்கி உள்ளது.

துணை காவல் கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், தொழிலாளர் ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர், எஸ்.எஸ்.ஏ., அரசு சாரா நிறுவனம் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இக்குழுவானது புகலிடம், நடைபாதை, பஸ் நிலையங்கள், சாலையோரங்கள், வழிப்பாட்டு கூடங்களில் காணாமல் போன குழந்தைகளை மீட்டு, அவர்களின் விவரத்தினை பரிசோதித்து, தேசிய வலைதளத்தில் www.trackthemissing.gov.in ல் பதிவேற்றம் செய்து அனுப்பவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய குழந்தைகள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பாம்பே கேஸ், ஊட்டி என்ற அலுவலக முகவரியிலேயோ, அல்லது 0423-2445529 என்ற தொலைபேசி எண்ணிலோ, தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us