பொங்கல் தின விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகள்
பொங்கல் தின விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகள்
UPDATED : ஜன 16, 2015 12:00 AM
ADDED : ஜன 16, 2015 02:14 PM
கோவை: பொங்கல் தின விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில், டி.கே.எஸ்.,பள்ளி அதிக புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை, கேலக்ஸி ரோட்டரி கிளப் மற்றும் கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் -கேம்ஸ் நல சங்கம் சார்பில் கோவை கிராமப்புற ஜூனியர், சீனியர் பிரிவு மாணவர்களுக்கான வாலிபால், கால்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. 25 பள்ளிகளை சேர்ந்த, 572 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் இரண்டு இடங்களை பெற்ற பள்ளிகள்
கிரிக்கெட்
ஜூனியர் பிரிவில் டி.கே.எஸ்.,பள்ளி ஏ-அணி, 3விக்கெட்கள் வித்தியாசத்தில் டி.கே.எஸ்.,பள்ளி-பி அணியை வென்று, கார்கில் வெற்றி கோப்பையை பெற்றது. சீனியர் பிரிவில் டி.ஆர்.ஏ.,பள்ளி, 19 ரன்கள் வித்தியாசத்தில் எல்சி மெட்ரிக் பள்ளியை வென்றது.
கால்பந்து
ஜூனியர் பிரிவில்; கே-சிர்ஸ் சர்வதேச பள்ளி 2-1 கோல் கணக்கில் டி.கே.எஸ்., பள்ளியை வென்று, குருப்பிரியா கோவிந்தராஜூலு சுழற்கோப்பையை பெற்றது.சீனியர் பிரிவில்; டி.ஆர்.ஏ.,மேல்நிலை பள்ளி டி.கே.எஸ்.,மெட்ரிக் பள்ளியை 3-2 கோல் கணக்கில் வென்றது.
வாலிபால்
ஜூனியர் பிரிவில்; விமல்ஜோதி மெட்ரிக் பள்ளி, 20-25, 25-15, 25-22 புள்ளி கணக்கில் டி.கே.எஸ்., பள்ளியை வென்று, ராமநாதன் சுழற் கோப்பையை பெற்றது. சீனியர் பிரிவில்; குரும்பபாளையம் கே.வி.,மெட்ரிக் பள்ளி, 18-25, 25-21, 25-27 புள்ளி கணக்கில் டி.கே.எஸ்.,மெட்ரிக் பள்ளியை வென்றது.
இறகுப்பந்து
6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை நடத்தப்பட்ட இறுதி போட்டிகளில்; சி.எம்.எஸ்.,மெட்ரிக் பள்ளி, டி.கே.எஸ்., பள்ளி, விமல்ஜோதி பள்ளி, கே.வி., எல்.சி.,பள்ளிகள் பதக்கங்களை பெற்றன.
