UPDATED : ஜன 16, 2015 12:00 AM
ADDED : ஜன 16, 2015 02:17 PM
அ நிறம் | அளவு
எழும்பூர்: தேசிய அளவிலான இளையோர் வாலிபால் போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உ.பி., மாநிலம் ராம்பூரில், தேசிய அளவிலான, 17வது, இளையோர் வாலிபால் போட்டி, ஜன. 17ல் துவங்கி, 22ம் தேதி வரை, நடைபெறுகிறது. அதில், பங்கேற்கும் தமிழக அணிகளில், தலா, 12 பேர் கொண்டு இருபாலர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக ஆண்கள் அணி, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா அணிகளை சந்திக்கிறது. பெண்கள் அணி, மேற்கு வங்கம், ஆந்திரா, டெல்லி, உத்தரகண்ட் அணிகளுடன் மோதுகிறது.
