UPDATED : ஜன 17, 2015 12:00 AM
ADDED : ஜன 17, 2015 02:36 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் தனிதிறன் போட்டிகளில் கிராமிய நடனத்தில் மாநில அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நடந்த மாநில போட்டிகளில் எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஜெயரூபிணி, புவனேஸ்வரி, சிவசங்கரி, முத்துபாண்டி, கார்த்திக் முருகன், பேச்சி முத்து பங்கேற்றனர்.
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 570 பேர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.அரசு ஆண்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் கிராமிய நடன போட்டியில் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றனர்.
