கல்லூரியில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி துவக்க விழா
கல்லூரியில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி துவக்க விழா
UPDATED : ஜன 19, 2015 12:00 AM
ADDED : ஜன 19, 2015 11:03 AM
அ நிறம் | அளவு
கோவை: காரமடை, ஆர்.வி. கலை, அறிவியல் கல்லூரியில், மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி துவக்க விழா நடந்தது.
குன்னூர், பாஸ்டர் நிறுவன உதவி ஆய்வு அலுவலர் சிவானந்தப்பா பேசுகையில், "எளிதில் கிடைக்கும் ரசாயன உரங்களை நாம் பயன்படுத்தி வருவதால், மண் தனது தன்மையை இழக்கிறது. இதனால், வேளாண் மற்றும் கால்நடை கழிவுகளை முறையாக ஒரு கிடங்கில் போட்டு, 45-60 நாட்கள் வரை பேணிகாத்து வந்தால், இயற்கை உரம் தயாராகிவிடும். வளரும் தலைமுறையினர், இதை பின்பற்றி, இயற்கையை காக்க முன்வர வேண்டும்" என்றார்.
