தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிரிக்கெட் போட்டியில் டீ பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டம்

கிரிக்கெட் போட்டியில் டீ பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டம்

கிரிக்கெட் போட்டியில் டீ பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டம்


UPDATED : ஜன 19, 2015 12:00 AM

ADDED : ஜன 19, 2015 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2015 12:00 AM ADDED : ஜன 19, 2015 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், டீ பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் கழகம் சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் லீக் போட்டி, டீ பப்ளிக் பள்ளியில் நடந்தது; இறுதி போட்டியில், டீ பப்ளிக் பள்ளி அணியும், கே.எஸ்.சி., அரசு பள்ளி அணியும் மோதின.

முதலில் பேட் செய்த கே.எஸ்.சி., பள்ளி அணி, நிர்ணயிக்கப்பட்ட 25 ஓவர்களில் 170 ரன் எடுத்தது. அதிகபட்சமாக நவீன்குமார் 43, சோமசுந்தரம் 37, நவநீதன் 35 ரன் எடுத்தனர். அடுத்து விளையாடிய டீ பள்ளி அணி, 14 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 171 ரன்களை, விக்கெட் இழப்பின்றி எடுத்தது. பொன் விவேக் 101 ரன்களையும், லோகேஷ் 51 ரன்களையும் எடுத்தனர்.

டீ பள்ளி அணி கேப்டன் நிதேஷ்குமார், இத்தொடரில் மொத்தமாக 346 ரன் எடுத்து, சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us