தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி.,யில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் பிஎச்.டி. மாணவர்களின் எண்ணிக்கை!

சென்னை ஐ.ஐ.டி.,யில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் பிஎச்.டி. மாணவர்களின் எண்ணிக்கை!

சென்னை ஐ.ஐ.டி.,யில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் பிஎச்.டி. மாணவர்களின் எண்ணிக்கை!


UPDATED : ஜன 20, 2015 12:00 AM

ADDED : ஜன 20, 2015 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2015 12:00 AM ADDED : ஜன 20, 2015 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் ஆண்டுதோறும், பிஎச்.டி., ஆய்வு படிப்பு மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, தையூர் பகுதியில் ஐ.ஐ.டி.,க்கு ஒதுக்கப்பட்டுள்ள 150 ஏக்கரில், ஆய்வுக் கூடங்கள் கொண்ட மையம் அமைக்கப்படும் என, ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில், 1970ல் படித்த மாணவர்களின் சந்திப்பு, ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்தது. இதில் பாஸ்கர் ராமமூர்த்தி பேசியதாவது: ஆந்திர மாநிலம், திருப்பதி மற்றும் கேரள மாநிலம், பாலக்காட்டில் புதிய ஐ.ஐ.டி.,க்கள் துவக்கப்பட உள்ளன. இதற்கான பாடத்திட்டம் வடிவமைத்தல், மாணவர் சேர்க்கை முதலியவற்றில், சென்னை ஐ.ஐ.டி., உதவி செய்யும். அங்குள்ள மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், அங்கு செல்ல வாய்ப்புள்ளது.

சென்னை, ஐ.ஐ.டி.,யில், 8,500 மாணவர் படிக்கின்றனர். இதில், 3,500 பேர் இளநிலையிலும், 2,200 பேர் ஆராய்ச்சி படிப்பிலும் சேர்ந்துள்ளனர். ஆண்டுதோறும், 200 பேர் பிஎச்.டி., முடித்து பட்டம் பெறுகின்றனர். இந்த எண்ணிக்கை விரைவில், 400க்கு மேல் உயரும் என தெரிகிறது. 1970 - 80களில், ஐ.ஐ.டி.,க்களில், சேரும் கிராமப்புற மாணவர் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்தது.

தற்போது, மாணவர் சேர்க்கையில், 18 - 20 சதவீதம் பேர், கிராமப்புறத்தில் இருந்து வருகின்றனர். எனவே, கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில், தையூர் பகுதியில், 150 ஏக்கர் ஐ.ஐ.டி.,க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆய்வுக்கான வசதிகளை ஏற்படுத்த உள்ளோம், என்றார். இந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கான, செயற்கை உடல் உறுப்புகளை குறைந்த விலையில் தயாரிக்கும் மையம் திறக்கப்பட்டது. ஐ.ஐ.டி.,யின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை, டி.டி.கே., நிறுவனத்துடன் இணைந்து, இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us