மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 2ம் இடம் வென்று சாதனை!
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 2ம் இடம் வென்று சாதனை!
UPDATED : ஜன 23, 2015 12:00 AM
ADDED : ஜன 23, 2015 12:30 PM
திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாய் மாநகராட்சி பள்ளி மாணவி சத்யபிரியா, மாநில அளவிலான, டேக்வாண்டோ போட்டியில், 2ம் இடம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி, தூத்துக்குடியில் நடந்தது. மண்டல அளவில் முதலிடம் வென்ற மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவு இறுதி போட்டியில், கோவை மற்றும் ஈரோடு மண்டல மாணவியர் இடையே நடந்தது. இதில், 26-29 கிலோ எடை பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி, 7ம் வகுப்பு மாணவி சத்யபிரியா, 7 புள்ளி பெற்று 2ம் இடம் வென்றார்.
அவர் கூறுகையில், "மாநில அளவில் 2ம் இடம் வென்றது மகிழ்ச்சி. தொடர்ந்து பயிற்சிபெற்று, "ஓபன் பிரிவிலான போட்டியில் பங்கேற்க உள்ளேன். வரும் நாட்களில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க முயற்சிப்பேன்" என்றார்.
