தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகள்

கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகள்

கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகள்


UPDATED : ஜன 23, 2015 12:00 AM

ADDED : ஜன 23, 2015 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2015 12:00 AM ADDED : ஜன 23, 2015 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் நடந்த கிரிக்கெட் போட்டியில், குமரகுரு, கற்பகம், ஸ்ரீ சக்தி, எஸ்.வி.எஸ்., கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கல்லூரிகளுக்கு இடையேயான, 30 ஓவர், அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி டிராபி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. குமரகுரு கல்லூரியும், ஆர்.வி.எஸ்., கல்லூரி அணியும் மோதிய ஆட்டத்தில், குமரகுரு கல்லூரி அணி, 27 ஓவரில், இரண்டு விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. பிரதீவ் 60, அசோக்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தலா 49 ரன்கள் எடுத்தனர். ஆர்.வி.எஸ்., அணி, 27 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

கற்பகம் பல்கலையும், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி அணியும் மோதிய ஆட்டத்தில், கற்பகம் அணி, ஏழு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. முத்துவேல் கணேஷ் 38 ரன்கள் எடுத்தார். ஜெயேந்திர சரஸ்வதி அணியின் ரமேஷ் பாபு, 26 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். அடுத்து விளையாடிய ஜெயந்திர சரஸ்வதி அணி, 23.3 ஓவரில், 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கணேஷ் குமார் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார்.

கற்பகம் அணியின் கார்த்திக், 21 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். சி.ஐ.டி., வளாகத்தில், எஸ்.என்.எஸ்., கல்லூரி அணியும், ஸ்ரீ சக்தி அணியும் மோதின. எஸ்.என்.எஸ்., அணி 24.2 ஓவரில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்கள் எடுத்தது. இந்திரஜித் 39, மோகன் குமார் 31 ரன்கள் எடுத்தனர்.

சக்தி அணியின் தமிழரசன், 25 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். சக்தி அணி, 24.1 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அரவிந்த் குமார் 74 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கை கொடுத்தார். எஸ்.என்.எஸ்., அணியின் பிரசாந்த், 16 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

ரத்தினம் கல்லூரி அணியும், எஸ்.வி.எஸ்., கல்லூரி அணியும் மோதிய ஆட்டத்தில், ரத்தினம் அணி, 25 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. எஸ்.வி.எஸ்., அணி, 22.5 ஓவரிலேயே, ஏழு விக்கெட்களை இழந்து, 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரத்தினம் அணி சார்பில், பாண்டியராஜன், 23 ரனர்கள் கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us