பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற அணி
பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற அணி
UPDATED : ஜன 24, 2015 12:00 AM
ADDED : ஜன 24, 2015 10:49 AM
கோவை: பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றன.
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான, 12வது ஆண்டு கோபால்நாயுடு நினைவு கோப்பை கால்பந்து போட்டி பள்ளியில் நடந்து வருகிறது.
* காலிறுதி போட்டியில், எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஷா ஹோம்ஸ் பள்ளியை வென்றது. எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியின் சபரிஷ் 24 நிமிடத்திலும், ராகுல் 44, 46வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர். மற்றொரு போட்டியில், கோபால் நாயுடு பள்ளி 2-0 கோல் கணக்கில் ராசகொண்டலார் பள்ளியை வென்றது. கோபால்நாயுடு பள்ளியின் பாலாஜி 18, 25 நிமிடங்களில் இரு கோல்கள் போட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்.
* அரைஇறுதி போட்டியில், கோபால் நாயுடு பள்ளி 2-1 கோல் கணக்கில் கிக்கானி மெட்ரிக் பள்ளியை வென்றது. கோபால் நாயுடு பள்ளியின் அபிலாஷ், பாலாஜி தலா ஒரு கோல் அடித்தனர். கிக்கானி மெட்ரிக் பள்ளியின் அகிஸ் ஒரு கோல் அடித்தார். மற்றொரு அரைஇறுதி போட்டியில், எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி 4-3 என்ற கோல் கணக்கில், டை பிரேக்கர் முறையில் கார்மல் கார்டன் பள்ளியை வென்றது.
எஸ்.பி.ஓ.ஏ.,மெட்ரிக் பள்ளியின் பால்ராஜ், பிரசாந்த், சுதுஜித், வினோத் ஆகியோரும், கார்மல்கார்டன் மெட்ரிக் பள்ளியின் அப்துல், பைசர், சாம் ஆகியோரும் கோல் அடித்தனர். பைனலில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, கோபால் நாயுடு பள்ளியை சந்திக்கிறது.
