மயக்கவியல் பயிற்சியில் 4 மாநிலங்களை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்பு
மயக்கவியல் பயிற்சியில் 4 மாநிலங்களை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்பு
UPDATED : ஜன 27, 2015 12:00 AM
ADDED : ஜன 27, 2015 12:34 PM
சென்னை: மயக்கவியல் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு நடந்த பயிற்சியில், நான்கு மாநிலங்களை சேர்ந்த, 200 மாணவர்கள் பங்கேற்றனர்.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, மயக்கவியல் துறை சார்பில், மயக்கவியல் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான, பயிலரங்கம், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்தது.
முதலுதவி சிகிச்சை அளித்தல், அறுவை சிகிச்சையின்போது, இதயத்தை துடிக்க வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எந்த மாதிரியான அறுவை சிகிச்சைக்கு எந்த பகுதியில், எந்த அளவில் மருந்து செலுத்த வேண்டும்; துறையில் உள்ள நவீனத்துவம் குறித்தும், வெள்ளையங்கிரி, பவானி உள்ளிட்ட டாக்டர்கள் செயல் விளக்கம் அளித்தனர். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.
