திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக் கல்லூரியில் 29ம்தேதி வேலைவாய்ப்பு முகாம்
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக் கல்லூரியில் 29ம்தேதி வேலைவாய்ப்பு முகாம்
UPDATED : ஜன 28, 2015 12:00 AM
ADDED : ஜன 28, 2015 11:12 AM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக் கல்லூரியில் நாளை(29ம்தேதி) வேலைவாய்ப்பிற்கான தேர்வு முகாம் நடக்கிறது.
கல்லூரி முதல்வர் பாஷா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நாளை நடக்கிறது. சென்னையை சேர்ந்த மூன்று முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள், பட்டதாரிகளை தேர்வு செய்கின்றனர்.
26 வயதிற்கு உட்பட்ட பட்டதாரி மாணவ, மாணவியர் மற்றும் இறுதியாண்டு படிப்பவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமிற்கு காலை 9:00 மணிக்குள் வர வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்பிற்கான அசல் மற்றும் நகல்கள், பட்டப் படிப்பிற்கான அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், பயோ-டேட்டா, 3 பாஸ்போர்ட் போட்டோக்களை எடுத்து வர வேண்டும்.
