தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா பள்ளிக் கட்டடம்?

பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா பள்ளிக் கட்டடம்?

பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா பள்ளிக் கட்டடம்?


UPDATED : ஜன 30, 2015 12:00 AM

ADDED : ஜன 30, 2015 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2015 12:00 AM ADDED : ஜன 30, 2015 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி: பயனின்றி கிடக்கும் ஒன்றிய பள்ளி கட்டடத்தினை, பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, திருவாயற்பாடி கள்ளுக்கடை மேடு பகுதியில், ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம் ஒன்று பயனின்று கிடக்கிறது. பாலாஜி நகர் பகுதியில், புதிய கட்டடத்தில் பள்ளி இயங்குவதால், தற்போது இந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

சிமென்ட் ஓடுகளால் அமைக்கப்பட்ட கட்டடத்தின் கதவு, ஜன்னல்கள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. சிமென்ட் ஓடுகள் உடைந்து கிடக்கின்றன. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உறைவிடமாகவும் கட்டடம் மாறி வருகிறது. கட்டடத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. பயனின்றி கிடக்கும் இந்த கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, சமூகநலக்கூடம், ஊர்ப்புற நுாலகம் போன்ற பொது பயன்பாட்டிற்கான கட்டடமாக மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us