இறகுபந்து போட்டியில் அழகப்பா உடற்கல்வி கல்லூரி மாணவிகள் வெற்றி
இறகுபந்து போட்டியில் அழகப்பா உடற்கல்வி கல்லூரி மாணவிகள் வெற்றி
UPDATED : ஜன 30, 2015 12:00 AM
ADDED : ஜன 30, 2015 11:36 AM
அ நிறம் | அளவு
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஆ.பி.சீ.அ. கல்லூரியில் பொன் விழாவை முன்னிட்டு நடந்த கல்லூரிகளுக்கிடையேயான இறகுபந்து போட்டியில் அழகப்பா உடற்கல்வி கல்லூரி மாணவிகள் வென்றனர்.
மாணவ, மாணவிகளுக்கு இரு பிரிவுகளில் ஒற்றையர் இறகுபந்து போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பிரிவில் 18 கல்லூரிகள் பங்கேற்றன. முதலாம் பரிசை ஆ.பி.சீ.அ.கல்லூரியும், 2வது பரிசை அழகப்பா உடற்கல்வி கல்லூரியும் வென்றனர். மாணவிகள் பிரிவில் 16 கல்லூரிகள் பங்கேற்றனர். முதல் இரு இடங்களை அழகப்பா உடற்கல்வி கல்லூரி மாணவிகளே வென்றனர்.
