தேசிய அளவில் பள்ளிகளுக்கான தடகளப் போட்டியில் தமிழகத்திற்கு இரண்டாமிடம்
தேசிய அளவில் பள்ளிகளுக்கான தடகளப் போட்டியில் தமிழகத்திற்கு இரண்டாமிடம்
UPDATED : ஜன 30, 2015 12:00 AM
ADDED : ஜன 30, 2015 12:59 PM
கோவை: அகில இந்திய அளவில் பள்ளிகளுக்கான தடகளப் போட்டியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பெற்றது.
இந்திய பள்ளிகள் விளையாட்டு கழகம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மிர்சா முண்டா ஸ்டேடியத்தில் தேசிய அளவில் அனைத்து மாநில 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். தமிழ்நாடு அணி, 37 பதக்கங்களில், 6 தங்கம், 20 வெள்ளி, 11 வெண்கலம் பெற்றன.
குறிப்பாக, கோவை கணபதி சி.எம்.எஸ்.,மெட்ரிக் பள்ளியின் சமயஸ்ரீ 800மீ., 1,500மீ., 3,000மீ., ஓட்டங்களில் மூன்றாவது இடமும்; சி.ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளியின் நந்தினி மும்முறை தாண்டுதலில் 2வது இடமும், அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலை பள்ளியின் ஷாலினி மற்றும் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியின் தெரசாகிரேஸ் 4*100மீ., தொடர் ஓட்டத்தில் இரண்டாவது இடமும் பெற்றனர்.
தெரசா, விஜயலதா, காமாட்சி, சுதா, விஜயகுமார் ஆகியோர் தமிழக அணியின் மேலாளர், பயிற்சியாளர்களாக சென்றனர். முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அனந்தலட்சுமி வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.
