பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நிலவரம்
பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நிலவரம்
UPDATED : பிப் 02, 2015 12:00 AM
ADDED : பிப் 02, 2015 10:41 AM
அ நிறம் | அளவு
தாம்பரம்: ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், 35வது சாய்ராம் டைஸ் 2015 பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள், அதன் வளாகத்தில் நடந்து வருகிறது.
இறகுபந்து, பூப்பந்து, கூடைபந்து, உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. அதில், தமிழகம் முழுவதும் இருந்து, 250 பொறியியல் கல்லுாரி அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மகளிர் இறுதி போட்டிகளில், மேஜைபந்தில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது.
இரண்டாம் இடத்தை, எஸ்.எஸ்.என்., கல்லுாரி அணி பிடித்தது. டென்னிசில், லயோலா ஐகாம் கல்லுாரி முதலிடமும்; எஸ்.எஸ்.என்., கல்லுாரி இரண்டாம் இடமும் பெற்றன.
