தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்தியால் அரசு கலைக் கல்லூரி கட்ட இடம் தேர்வு

தினமலர் செய்தியால் அரசு கலைக் கல்லூரி கட்ட இடம் தேர்வு

தினமலர் செய்தியால் அரசு கலைக் கல்லூரி கட்ட இடம் தேர்வு


UPDATED : பிப் 02, 2015 12:00 AM

ADDED : பிப் 02, 2015 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2015 12:00 AM ADDED : பிப் 02, 2015 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: தினமலர் செய்தி எதிரொலியாக, திருவாடானையில் அரசு கலைக் கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.

திருவாடானையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கலைக் கல்லூரி துவங்கப்பட்டது. கட்டட வசதி இல்லாததால், அரசு மேல்நிலைப் பள்ளியில் சில வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வரகிறது. இட நெருக்கடியால் மாணவ, மாணவியர் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து கல்லூரி கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

மாவட்ட கவுன்சிலர் ஆனிமுத்து கூறுகையில், "திருவாடானை அரசு கலைக் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட மங்களநாதன் குளம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. இதற்கான பூமி பூஜை விரைவில் துவங்கப்படவுள்ளது.

அதேபோல், திருவாடானையில் தியாகிகள் அதிகம் வசிப்பதால் அவர்களின் நினைவாக தியாகிகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், விரைவில் இதற்கான திறப்பு விழாவும் நடைபெற உள்ளது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us