UPDATED : பிப் 02, 2015 12:00 AM
ADDED : பிப் 02, 2015 11:03 AM
சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவமனை, டீன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய டீன் நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த மீனாட்சி சுந்தரம், திருவாரூர் மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் விடைபெற்று, திரூவாரூர் சென்றுள்ளார். ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரிக்கு, புதிய டீன் இன்னும் நியமிக்கப்படவில்லை.
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன், பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். புது முதல்வர் நியமிக்கும் வரை, இவர் பொறுப்பில் இருப்பார்.
திருச்சி மருத்துவக் கல்லுாரி டீன் கார்குழலியை, ஸ்டான்லி மருத்துவமனை டீனாக நியமிப்பதாக இருந்தது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இடமாற்றம் செய்யப்படவில்லை. தேர்தல் முடிந்தபின், கார்குழலி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
