பாரதியார் பல்கலையின் பகுதிநேர பிஎச்.டி. படிப்பிற்கு 920 பேர் தேர்வு
பாரதியார் பல்கலையின் பகுதிநேர பிஎச்.டி. படிப்பிற்கு 920 பேர் தேர்வு
UPDATED : பிப் 02, 2015 12:00 AM
ADDED : பிப் 02, 2015 11:01 AM
கோவை: பாரதியார் பல்கலையின் பகுதிநேர பிஎச்.டி., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன; 920 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பாரதியார் பல்கலையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 30க்கும் மேற்பட்ட துறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில், பகுதிநேர பிஎச்.டி., பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் ஜூலை மற்றும் டிச., மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. முதுகலை படிப்பில், 55 சதவீதம் தேர்ச்சிபெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.
பகுதிநேர பிஎச்.டி., நுழைவுத் தேர்வுக்கு, 1,800 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதிவாய்ந்த 1,515 பேர் கடந்தாண்டு டிச., மாதம் இரு நாட்கள் தேர்வுகள் எழுதினர்.
தொடர்ந்து, தேர்வு முடிவுகள் www.bu.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் கணேசன் தெரிவித்தார்.
