தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவர்கள்!

மாநில சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவர்கள்!

மாநில சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவர்கள்!


UPDATED : பிப் 02, 2015 12:00 AM

ADDED : பிப் 02, 2015 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2015 12:00 AM ADDED : பிப் 02, 2015 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பள்ளிக் கல்வித்துறை நடத்திய மாநில சைக்கிள் போட்டியில், கோவை மாணவர்கள் இருவர் தங்கம் வென்றனர்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு போட்டிகள் கல்வி மாவட்டம் மற்றும் மண்டல அளவில் நடந்தன.

தமிழகத்தில், 15 மண்டல அளவிலான போட்டிகளில், முதலிடம் பெற்றவர்கள் பங்கேற்ற மாநில சைக்கிள் போட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்தது. கோவை மண்டலத்தில் மூன்று பிரிவுகளில், முதலிடம் பெற்ற மாணவர்கள் மூவர், மாணவியர் மூவர் பங்கேற்றனர்.

இதில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், அன்னுார் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி, 10ம் வகுப்பு மாணவி பவித்ராஸ்ரீ, 10 கி.மீ., துார ரோடு சைக்கிளிங் போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், கோவைபுதுார், ஆஸ்ரம் பள்ளி மாணவர் அஸ்வின், 20 கி.மீ., துார போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி நந்தினி 15 கி.மீ., துார போட்டியில், மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us