தேசிய கேரம் போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவர் தேர்வு
தேசிய கேரம் போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவர் தேர்வு
UPDATED : பிப் 05, 2015 12:00 AM
ADDED : பிப் 05, 2015 12:08 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: அசாமில் மார்ச் 31 ல் நடக்கவுள்ள தேசிய அளவிலான கேரம் போட்டியில், தமிழக அணிக்காக விளையாட ராமநாதபுரம் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ராமநாதபுரம் முகம்மது தஸ்தகீர் மெட்ரிக்., பள்ளியில் படிக்கும் 9 ம் வகுப்பு மாணவர் எஸ்.தினேஷ்பாபு. இவர், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சிவகாசியில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில் 2 ம் இடம் பிடித்தார்.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து, ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசு பெற்றார். தற்போது, மார்ச் 31 ல் அசாமில் நடக்கும் தேசிய அளவிலான கேரம்போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தினேஷ்பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
