தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குறிக்கோள்களை அடைய மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்: சைலேந்திரபாபு

குறிக்கோள்களை அடைய மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்: சைலேந்திரபாபு

குறிக்கோள்களை அடைய மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்: சைலேந்திரபாபு


UPDATED : பிப் 08, 2015 12:00 AM

ADDED : பிப் 08, 2015 12:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2015 12:00 AM ADDED : பிப் 08, 2015 12:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: "குறிக்கோள்களை அடைய மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்” என கடலோர பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசினார்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது.

ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: சாதிக்கும் சிந்தனை வேண்டும். அறிவுப் பசி அனைவருக்கும் அவசியம். எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. குறிக்கோள், லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை அடைய 10 ஆயிரம் மணி நேரம் உழைக்க வேண்டும். சாகும்வரை படித்து கொண்டு இருக்க வேண்டும். வெற்றியின் ரகசியம் வாசிப்பதுதான். பாட புத்தகங்கள் தவிர, தினம் 100 பக்கம் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவருக்குள் ஏராளமான திறமைகள் உள்ளன. அதை வெளிக்கொண்டு வர வேண்டும். வாழ்வில் வெற்றி, தோல்வி வரும். தோல்விகள் அதிகம் வரும். அதற்காக மனம் தளரக்கூடாது. அது அனுபவங்களை கொடுப்பதுடன், திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us